சொத்திற்காக தந்தையை கார் ஏற்றி கொன்ற மகன் கைது

ஓட்டப்பிடாரம் அருகே தந்தையை 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்திற்காக கார் ஏற்றி கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-06-25 04:23 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆலந்தா கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு ஐந்து மகள்கள், ஒரு மகன் உள்ளனர் .  கருப்பசாமிக்கு சொந்தமான 2 ஏக்கர் 7-சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை செல்லப்பாண்டி என்பவருக்கு கருப்பசாமி விற்பனை செய்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கருப்பசாமி தன்னுடைய மகன் சின்னத்துரை என்பவருக்கு தெரியாமல் நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சின்னத்துரை தந்தை கருப்பசாமி மீண்டும் இடத்தினை மீட்டு தர தெரிவித்துள்ளார். இதனை கருப்பசாமி மறுத்ததாக தெரிகிறது இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல காலையில் கருப்பசாமி என்பவர் தன்னுடைய தோட்டத்திற்கு வீட்டில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இதனை அறிந்த சின்னத்துரை தனது சுமோ விட்டா காரை எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்து சென்று கருப்பசாமி அருகில் கார் வந்த பின்னர் அதிவேகமாக சென்று கருப்பசாமி என்பவர் பின்னால் மோதியதில் தந்தை கருப்பசாமி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.இதனை அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கருப்பசாமி (80)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் கருப்பசாமியின் மகன்  சின்னத்துரையை  கைது செய்து அவர் மீது கொலை வழக்காக பதிவு செய்து சுமோ காரையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் பகுதியில் சொத்திற்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News