கடையநல்லூர் போலீசாரை பாராட்டிய தென்மண்டல ஐஜி
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த கடையநல்லூர் போலீசாரை ஐஜி கண்ணன் பாராட்டினார்.
Update: 2024-03-04 05:11 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா (42) என்பவர் கடந்த 17 ஆண்டாக விசாரணைக்கு ஆஜராகாமல் வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குற்றவாளியை கைது செய்ய மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று போலீசாரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.