வாகன சோதனை பணிகளை எஸ்.பி., ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-07 04:04 GMT
எஸ்பி ஆய்வு மேற்கொண்ட போது
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை குழு (Flying Squad Team) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் (Static Surveillance Team) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பணம் பட்டுவாடாவை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி (05.04.2024) குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.