ஆனந்த காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை

குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.;

Update: 2024-01-05 03:39 GMT

ஆனந்த காலபைரவர்  

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த ஆனந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆனந்த காலபைரவர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பைரவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு பால், பன்னீர், இளநீர், குங்குமம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், தேங்காய், பூசணிக்காய், பாவற்காய் இவற்றில் தீபமிட்டு, காலை முதலே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து வழிபாடு நடத்தினர்.




Tags:    

Similar News