ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
திருச்சி ஆயில்மில் மலையப்பநகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது;
Update: 2024-01-02 00:49 GMT
ஐயப்ப சுவாமி
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆயில்மில் மலையப்பநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில் மூலவரான ஐயப்பனுக்கும், உற்சவமூர்த்திக்கும், விநாயக பெருமானுக்கும் பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் ,நெய், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நாணயங்களைக் கொண்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்ட ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு மகா தீபாரணை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷமிட்டு ஐயப்பனை வழிபட்டனர்.