மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

கன்று பேரணியில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான பரிசும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Update: 2023-12-09 07:55 GMT

மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்தர் ஷீலா உத்தரவின் பேரில், நோய் புலனாய்வு பிரிவுஉதவி இயக்குனர் சுகுமார்வையம்பட்டி கால்நடை மருத்துவர் ரவிசங்கர், ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் சுமார் 650 பசுக்கள், 260 வெள்ளாடுகள், 165 செம்மறியாடுகள், 196 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். கன்று பேரணியில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான பரிசும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News