கோவிலூரில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி

கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி மற்றும் பாடல் திருப்பலி நடைபெற்றது

Update: 2024-03-24 05:41 GMT
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்னும் நோன்பு கால விரத முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சிறப்பு தினமாக குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டு வருகிறது கைகளில் குருத்து ஓலைகளை ஏந்தி தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று முழக்கமிட்டு வழிபாடுகள் செய்வது வழக்கம் இன்று முதல் கிறிஸ்தவர்களின் புனித வாரம் துவங்க உள்ளது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை அருட்திரு லீபின் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் நிர்மலா மையத்திலிருந்து குரு ஓலைகளை கையில் ஏந்தி தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று பாடல் பாடி தேவாலயத்திற்குள் நுழைந்தனர். பின்பு கூட்டு பாடற்திருப்பலி நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News