விழுப்புரத்தில் இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விழுப்புரத்தில் இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Update: 2024-04-05 11:44 GMT
வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு பஸ்களில் பயணிகள் அதி களவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணா மலை, போளூர் ஆகிய இடங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்களும், நாளை 200 பஸ்களும் ஆக மொத்தம் 350 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை இயக்கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.