மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (NIDC) பெற்றுள்ளனர். இதில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) சிரமம் இல்லாமல் கிடைக்கப்பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி 01.12.2023 அன்று முதல் 07.12.2023 வரை அந்தந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள இ - சேவை மையங்கள் (வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ - சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் 1. மாற்றுத் திறனாளி அடையாள அட்டை. (NIDC) மற்றும் மருத்துவச்சான்று (FORM –VII), 2. ஆதார் அட்டை, 3. புகைப்படம் (passport size), 4. பயனாளியின் தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். எனவே, மேற்கண்ட நாட்களில் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.