மங்கள வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

வசந்த பஞ்சமியை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீமங்கள வராகி அம்மன் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு மகா ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;

Update: 2024-02-15 01:09 GMT

ஸ்ரீமங்கள வராகி அம்மன்

மாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி ஆகும். இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாகவும், மங்கள காரியங்கள் தொடங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. பொதுவாக பஞ்சமி திதி வராகி அம்மனுக்கு உகந்தது. வசந்த பஞ்சமி நாள் சரஸ்வதி தேவிக்கு சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் பலவாய்ந்த வசந்த பஞ்சமி விழா, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான காசி விஸ்வநாதர் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சிறப்பு மகா ஹோமம், வராகி மூலமந்திர ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீமங்கள வராகி அம்மன் மற்றும் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவை, ஆன்மீக அன்பர் எஸ்.வி.பாண்டுரெங்கன் ஏற்பாடு செய்திருந்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News