குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

Update: 2024-01-26 11:40 GMT

 வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். 

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு.

குடியரசு தினத்தை முன்னிட்டுவேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், . மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜுவன் இயக்கம் மற்றும் கிராம வளர்ச்சிக்கான இதர பொருட்கள் என 14 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News