திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம்

வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-22 08:14 GMT

வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி திருநங்கைகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு ஆதார் அட்டை விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை, மருத்துவ அட்டை ,அடையாள அட்டை ,குடும்ப அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பித்தனர். இதையொட்டி அங்கு தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக பதிவு செய்யப்பட்டது.

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ அட்டை உள்ளிட்டவை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். 40 வயது கடந்த திருநங்கைகளுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழில் செய்வதற்காக மானியம் பெறுவதற்கு 55 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் . மேலும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கும் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது குடியிருப்பு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News