கோண்டூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்
கோண்டூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 04:53 GMT
மருத்துவ முகாம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.