காஞ்சிபுரம் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக தள்ளிவைப்பு!

காஞ்சிபுரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தை புறக்கணித்து திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது

Update: 2024-03-15 09:00 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தை புறக்கணித்து திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது


இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தை புறக்கணித்து திமுக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இது போன்ற நிலையினால் மக்கள் நல திட்ட பணிகள் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான நல திட்டங்களை மாதாந்திர கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அதை செயல்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இதில் திமுக பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் அதிமுகவினர் அவ்வப்போது மக்கள் நல திட்டங்கள் தங்களது வார்டுகளில் செய்யவில்லை எனக்கூறி அவ்வப்போது வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் என நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 21 தீர்மானங்களை முன்னிறுத்தி நேற்று சிறப்பு மாநகராட்சி கூட்டம் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் தங்களை சரிவர மதிக்கவில்லை எனவும் , பாதாள சாக்கடை திட்ட துவக்க விழாவுக்கு தங்களை அழைக்கவில்லை என இரு காரணங்களை கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் திமுக அதிமுக பாஜக கவுன்சிலர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், இன்றும் திமுக கவுன்சிலர்கள் 11 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் மற்ற மாமன்ற உறுப்பினர்கள் வராததால் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டத்தை புறக்கணித்த நபர்கள் மண்டல குழு அலுவலகத்தில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு மாநகராட்சி ஆணையரை மாற்றும் வரை கூட்டத்தை புறக்கணிப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானால் எந்த ஓரு திட்டங்களையும் நிறைவேற்ற இயலாது என்பதும், இதனால் மக்கள் நல திட்ட பணிகள் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதை என்பது பெரும் வருத்தத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News