ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரையில் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆஞ்சநேயருக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து நடைபெற்றது அதன் பிறகு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பஞ்சாங்கம் படித்து இந்த ஆண்டு ராசி பலன்களை தெரிவித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.