சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
தைப்பொங்கலை முன்னிட்டு சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.;
Update: 2024-01-16 01:07 GMT
பெரியநாயகி அம்மன்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் தை திருநாளையொட்டி பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது.தொடந்து அருள்மிகு பெரியநாயகி உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு அருள்மிகு சோளீஸ்வரர்,பெரியநாயகி சுவாமிகளை வழிபாடு செய்தனர்.