அழக சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம் அழக சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடந்த வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-21 01:22 GMT
அழக சவுந்தரராஜ பெருமாள்
மல்லசமுத்திரத்தில் இருக்கும், அழக சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நேற்று, பங்குனிமாத வளர்பிறையை முன்னிட்டு, மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி, அழக சவுந்தரராஜ பெருமாளுக்கு பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிசேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.