அயோத்தி ராமர் கோவில் அட்சதை கலசத்துக்கு சிறப்பு பூஜை
Update: 2023-12-11 07:18 GMT
சிறப்பு பூஜை
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்ட அட்சதை கலசங்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்துக்கு வந்த அந்த கலசத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அட்சதை கலசத்துக்கு மரவனேரி மாதவம் நிலையத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் செந்தில்குமார், வித்யாபாரதி அமைப்பின் மாநில தலைவர் கிருஷ்ணசெட்டி, விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மாவட்ட செயலாளர் குணசேகர பட்டாச்சாரியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலசத்தில் உள்ள அட்சதை, கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் கோவில் புகைப்படம் ஆகியவற்றை வருகிற 31-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை வீடு, வீடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.