தைபூச விழாவையொட்டி ஆறுமுக வேலனுக்கு சிறப்பு பூஜை
சங்ககிரியில் ஆறுமுக வேலனுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-01-25 17:00 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுகவேலன் உடனமர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு தைபூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தைபூசத்தையொட்டி அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால்,தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று சங்ககிரி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காவடிகளை எடுத்து ஆடிச்சென்று கோயிலை சென்றடைந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.