புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்பு !
பிரதோஷத்தை முன்னிட்டு சிவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று பிரதோஷம் புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்பு ! சிவனுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதமாகும். பிரதோஷ விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள் விலகி, நன்மைகள் பெரும், கஷ்டங்கள் தீரும். அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். தொடர்ந்து பிரதோஷ விரதத்தை 12 வருடங்கள் கடைபிடிப்பவர்கள் சிவ கணங்களில் ஒருவராகி, சிவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுவார்கள்.
பிரதோஷ விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, சகல நன்மைகளும் வந்து சேரும். பிரதோஷம் : சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் பரிபூரண அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதமாகும். சுக்லபட்சம், கிருஷ்ண பட்சம் என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வருவது வழக்கம். பிரதோஷ விரதம் : திங்கட்கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகா பிரதோஷம் என்றும் சொல்கிறோம்.
அதே போல் புதன்கிழமையில் வரும் பிரதோஷமும் அதீத விசேஷமானதாகும். இந்து மத நம்பிக்கையின் படி புதன்கிழமையும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும். புதன்கிழமை பிரதோஷ பலன்கள் : ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கும் ஒரு விசேஷ பலன் உண்டு. அந்த வகையில் புதன்கிழமையில் வரும் பிரதோஷமானது பதினாறு வகையான செல்வங்களையும் அள்ளித் தரக்கூடியதாகும். திருமணமாகாதவர்கள் புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டிக் கொண்டு விரதம் இருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கை கூடி வரும். அது மட்டுமல்ல ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகிய பாக்கியங்களும் கிடைக்கும்.
விரதம் இருக்கும் முறை : புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் செவ்வாய்கிழமை மாலையே குளித்து, சிவ வழிபாட்டை துவக்கி விட வேண்டும். அன்று இரவு எளிமையான உணவை எடுத்துக் கொண்டு, புதன்கிழமை அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, விரதத்தை துவக்கி விட வேண்டும். உபவாசமாக விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். ஓம் நம சிவாய மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து 108 முறை சொல்ல வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் : சிவ ஸ்லோகங்கள், சிவ புராணம் ஆகியவற்றை படிப்பது சிறப்பான பலன்களை தரும். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று, நந்திக்கும் சிவ பெருமானுக்கும் நடக்கும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்ய வேண்டும். நந்திக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அனைத்தும் விலகும். புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் புத்தி தெளிவடையும், மனோபலம் அதிகரிக்கும்.
பிரதோஷ காலத்தில் பிரதட்சணம் செய்யும் முறை: பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிவபெருமானை வணங்கும் முறையைப் பற்றி கடண்பவன புராணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதோஷ தினத்தில் நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று சிவனை வணங்கி, இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். (உங்களுக்கு வலது புறம்). பின்னர் மீண்டும் சண்டிகேஸ்வர் உள்ள இடத்திலிருந்து வல சென்று கோமுகி எனப்படும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியே வரும் துவார வழியே தரிசனம் செய்து, அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் அதே போல் மீண்டும் கோமுகிக்கு சென்றூ தரிசனம் செய்து பின் சண்டிகேஸ்வரர் உள்ள சன்னதிக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் இதே போல் செய்ய வேண்டும். கடைசியில் நந்தியை தரிசனம் செய்த பின்னர் சிவ பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
சோமசூத்திர பிரதட்சணம் இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவதற்கு ‘சோமசூத்திர பிரதட்சணம்’ என்று பெயர். சோம சூத்திர பிரதட்சணம் செய்து வழிபட்ட பின்னர் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு, ‘ஆத்ம பிரதட்சணம்’ செய்ய வேண்டும். இப்படி பிரதோஷ தினத்தில் பரிதட்சணம் செய்து வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடைப்பெறுவோம். பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமான், நந்தியை வழிபடும் போது நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என சிவபுராணம் படிப்பது அவசியம். யாரை பற்றியும் குற்றம் குறை சொல்லி பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். சிவனின் நாமத்தை மாட்டும் உச்சரியுங்கள். நந்தியை மறைத்துக் கொண்டு சிவ பெருமானை வணங்காதீர்கள். நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ தரிசனம் பாருங்கள்.