சூசைநாதருக்கு புனிதர் பட்டம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடியில் இறையடியார் அந்தோணி சூசைநாதருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.;

Update: 2024-06-09 13:21 GMT

சூசைநாதருக்கு சிறப்பு பட்டம் வேண்டி பிரார்த்தனை

தூத்துக்குடியை சேர்ந்த இறையடியார் அந்தோணி சூசைநாதர் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் பணியாற்றினார். இவர் 29 ஆண்டுகள் மறைமாவட்ட குருவாகவும், 29 ஆண்டுகள் ஜெபமாலை தாசர் சபை துறவியாகவும் பணியாற்றினார்.

இவர் உவரியில் பணியாற்றிய போது பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையை நிறுவினார். இந்த சபை தற்போது 52 பங்குகளுக்கு பரவி இருக்கிறது. இவர் 1968-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி உயிர் துறந்தார். இவருக்கு, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும், உவரி புனித அந்திரயா மற்றும் புனித அந்தோனியார் கோவிலிலும் மார்பளவு சிலையும், தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு உபகார மாதா ஆலய பங்கில் முழு உருவச்சிலையும் உள்ளது.

Advertisement

இவரை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி போப் 16-ம் பெனடிக் இறையடியார் நிலைக்கு உயர்த்தினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அவர் உயிர் துறந்த நாளான இன்று அவரது 56 ஆம் ஆண்டு புகழஞ்சலியும் அவருக்கு,

புனிதர் பட்டம் கிடைக்க வேண்டியும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆலயங்களில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் உள்ள மதுவிலக்கு சபை அலுவலகத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அந்தோனி ஸ்டீபன், 

 மறைமாவட்ட முதன்மை தந்தை பேரருட்திரு ரவி பாலன், மறைமாவட்ட தலைமைச் செயலர் பேரருட்தந்தை அந்தோனி ஜெகதீஷ், மறைமாவட்ட பொருளாளர் பேரருட் தந்தை பிரதீப், தமிழ்நாடு அருங்கொடை பணிக்குழு செயலர் அருட்தந்தை மகிலன், மறைமாவட்ட இளைஞர் இயக்குநர் அருட்தந்தை சுதர்சன், திருஇருதயங்களின் பேராலய பங்கு தந்தை ஜெயக்குமார், அன்னா நகர் பங்கு தந்தை சகாயம், நாகலாபுரம் பங்கு தந்தை ரினோ, அருட்தந்தை ரஞ்சித் கர்டோசா மற்றும் ஆயர் இல்ல அருட்சகோதரிகள் தலைமையில் ஆயர் இல்லத்தில்,

இறையடியரர் அந்தோனி சூசைநாதரின் 56 ஆம் ஆண்டு விண்ணக பிறப்பு நாள் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மறைமாவட்ட அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை மற்றும் போதை நோய் நலப்பணிக்குழு இயக்குநர் நிகழ்வு ஏற்பாடுகளை ஒருங்கினைத்தார்கள்.

Tags:    

Similar News