விஜயகாந்த் நலம் பெறவேண்டி தேமுதிகவினர் சிறப்பு பிராத்தனை

Update: 2023-12-04 06:09 GMT
விஜயகாந்த நலம் பெற வேண்டி பிராத்தனை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த மணப்பாறை ஒன்றிய தேமுதிகவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் வழிகாட்டுதலின் படி மாவட்ட துணை செயலாளர் டி.ஆர். சரவணன் தலைமையில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பூரணமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் அபிஷேகமும் நடைபெற்றது. மணப்பாறை ஒருங்கிணைந்த ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்தின் உடல் நலம் பெற இறைவனிடம் மனமுருக வேண்டி அர்ச்சனை செய்தனர். இதில் மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம் , பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News