கெங்கவல்லியில் பக்ரீத் பண்டிகையோட்டி சிறப்பு தொழுகை

கெங்கவல்லியில் பக்ரீத் பண்டிகையோட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2024-06-17 17:05 GMT
கெங்கவல்லியில் சிறப்பு தொழுகை

கெங்கவல்லியில் பக்ரீத் பண்டிகையோட்டி சிறப்பு தொழுகை ; 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகைகொண்டாடப்படுகிறது இந்த பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவள்ளியில் வடக்கு ஜூம்ஹ மஸ்ஜித் மற்றும் தெற்கு மசூதி சார்பில் இலுப்பு தோப்பு ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளிவாசல் பகுதியிலிருந்து 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து ஈத்கா மைதானத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் ஆற தழுவி தங்களுடைய பக்ரீத் பண்டிகையின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News