பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை !

திண்டுக்கல் ரம்ஜான் கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித பண்டிகையான ரம்ஜான் ஈகைத் திருநாள் இன்று நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

Update: 2024-04-11 08:45 GMT

சிறப்பு தொழுகை

வழக்கமான உற்சாகத்துடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பிருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரமலானை கடைப்பிடித்து வருகின்றனர்.

இன்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், வேல்வார் கோட்டை பள்ளிவாசல், நாகல் நகர் ,ரவுண்ட் ரோடு, ஆர்வி நகர், செல்லாண்டி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News