பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு என கலெக்டர் பிருந்தா தேவி தகவல்.;
Update: 2024-03-20 01:55 GMT
கலெக்டர் பிருந்தா தேவி
நாடாளுமன்ற தேர்தலில் மூத்த குடிமக்கள், கண் பார்வை குறைபாடு, மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக போக்குவரத்து வசதிகள் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாக்குப்பதிவு நாளன்று அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். பொது போக்குவரத்து வசதி இல்லை என்றால், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.சேலம் சீலம்