கோவிலூரில் பெரிய வியாழன் சிறப்பு சடங்கு அனுசரிப்பு

கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு சடங்கு மற்றும் திருப்பலி நடந்தது.

Update: 2024-03-29 01:49 GMT

 கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தற்போது தவக்காலத்தின் ஒரு பகுதியான புனித வாரத்தை அனுசரித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று புனித வியாழன் இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு மற்றும் தனது சீடர்களுக்கு பாதம் கழுவும் சடங்கு கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் பங்கு தந்தையர்கள் 12 நபர்களை இயேசுவின் சிடர்களாக கருதி அவர்களின் பாதங்களைக் கழுவி அதற்கு பின்பு சிறப்பு பாடல் திருப்பலி சடங்கை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாக பங்கு பெற்றனர்.

Tags:    

Similar News