திருத்தணியில் திருப்படி விழா - சிறப்பு ரயில்கள்

திருப்படி திருவிழாவை முன்னிட்டு டிச.31-இல் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2023-12-25 01:59 GMT

சிறப்பு ரயில்கள்

திருத்தணி திருப்படி திருவிழாவை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி இரவு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,  திருத்தணி முருகன் கோயிலில் படி உற்சவம் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு திருப்படி உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தின் போது பக்தா்கள் ஒவ்வொரு படிதோறும் பாட்டுபாடி வணங்கிச் செல்வா். இதில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்பா். இதற்காக தெற்கு ரயில்வே அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம்.

அதன்படி, வரும் 31-ஆம் தேதி சிறப்பு மின்சார ரயில் அரக்கோணத்தில் இருந்து இரவு 11.10-க்கு புறப்பட்டு திருத்தணியை 11.30 மணிக்கு அடையும். மறுவழித்தடத்தில் திருத்தணியில் இருந்து 11.40-க்கு புறப்பட்டு அரக்கோணத்தை நள்ளிரவு 12 மணிக்கு அடையும். இரண்டாவது சிறப்பு ரயில் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 12.05-க்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 12.25-க்கு திருத்தணியை அடையும். மறுமாா்க்கத்தில் 12.35-க்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு 12.55-க்கு அரக்கோணத்தை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News