துறையூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி துறையூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-02 11:41 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி துறையூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்,கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பயிற்சி நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை துறை நோய் நிகழ்வியல் உதவி இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கினார்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார்,உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம்,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் வரவேற்றார்.

முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல்,நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை,பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல்,சினை பரிசோதனை,மலடு நீக்கம்,கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்,கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.இதில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் வினோதினி விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துக்குமரன்,சிவப்பிரியா,ராதா,பூபதி,அருண்,ஸ்ரீதர்,நந்தகுமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் கால்நடை உதவி மருத்துவர் பெரோஸ்முகமது நன்றி கூறினார்.

Tags:    

Similar News