அயோத்தி ராமர் அட்சதைக்கு தர்மபுரியில் சிறப்பு சிறப்பு வழிபாடு
அயோத்தி ராமர் அட்சதைக்கு தர்மபுரியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அயோத்தி ராமர் அட்சதையை தர்மபுரியில் வரவேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அயோத்தி கோயில் ராமர் குடமுழுக்கு விழா வரும் ஜன. 22 -இல் நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் இருந்து குழந்தை ராமர் அட்சதை ஞாயிற்றுக்கிழமை தர்மபுரி வந்தது இதனை, விஎச்பி மாநில அமைப்பாளர் ராமன் ஜி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, அட்சதைக்கு தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சினமர் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து விஎச்பி அமைப்பாளர் ராமன் ஜி கூறியதாவது: அயோத்தியில் ஜன. 22-இல் நடைபெறுகிறது. இதையொட்டி அயோத்தி குழ-குட முழுக்கு குழந்தை ராமர் அட்சதை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில், ராமர் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ், குழந்தை ராமர் உருவப்படம், அட்சதை ஆகியவை ஒரு கோடி குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த பணி வரும் டிச.31 இல் தொடங்கி ஜன.15- க்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமர் கோயில் குடமுழுக்கு நாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி ராமரை வழிபட வேண்டும். மேலும், 108முறை ராமர் நாமத்தை உச்சரிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட வேண்டும். தர்மபுரியில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட குழந்தை ராமர் அட்சதை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்சியில் விஎச்பி அமைப்பின் தர்மபுரி மாவட்ட செயலாளர் பசுபதி, அமைப்பாளர் முரளி, ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.