புதுக்கோட்டையில் சிறப்பு வழிபாடு

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டையொட்டி புதுக்கோட்டையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-01-24 03:20 GMT

சிறப்பு வழிபாடு

அயோதியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட விழாவையொட்டி புதுக்கோட்டையில் திங்கட்கிழமை பாஜகவினர் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். திருக்கோகர்ணம் விநாயகர் கோயில் வளாகத்தில் ராமரின் படத்தை வைத்து அனைத்துக் கட்சியினரும் வழிபாடு நடத்தினர். எஸ்இடி திரை வைத்து அயோத்திய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் தலைமையில், பாஜக நகர தலைவர்கள் லட்சுமணன், சக்திவேல், அதிமுக நகரச் செயலார் க. பாஸ்கர்,நகர்மன்ற உறுப்பினர்கள் செ.அடைக்கலம் (திமுக)மா. சத்யா (அதிமுக) உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அனுமன் சிலைக்கு பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் தலைமையில், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலர் ஏவிசிசி கணேசன்,வழக்குரைஞர் ஜி. மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அம்மா சமுத்திரம் கிராமத்தில் உள்ளருக்மணி சத்தியபாமா உடனறை ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயிலில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விராலிமலையில், விராலிமலை முருகன் மலைக் கோயிலில் திங்கட்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் பாஜகவினர் ராமர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து, நலிந்தோருக்கு அன்னதானம் வழங்கினர். மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், விராலிமலையில் மத்திய அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்பட்டிருந்தன.

Tags:    

Similar News