திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-01-05 02:48 GMT
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானத்திற்கு கைங்கர்யம் செலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு ஆரத்தி பூஜை, சுவாமி பல்லக்கு சேவையில் அருள்பாலித்தார்.