கோவிலூரில் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு சிலுவை பாதை மற்றும் கூட்டுப்பாடற் திருப்பலி நடைபெற்றது.
Update: 2024-02-17 02:03 GMT
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தற்போது தவக்கால நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர் இந்த நோன்பு காலங்களில் காவி உடை அணிந்து ஒருவேளை விரதம் இருந்து தவ வழிபாடுகள் செய்து வருவார்கள் மேலும் வெள்ளிக்கிழமை நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதைகள் கத்தோலிக்க தேவ ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். இதனால் தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது.நேற்று இரவு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி முன்னிலையில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பையஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு சிலுவை பாதை மற்றும் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.