தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கு விளையாட்டு பயிற்சி
தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாமினை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
By : King 24x7 Website
Update: 2023-12-24 18:16 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வான தமிழக ஹாக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் முகாமினை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான ஹாக்கி விளையாட்டுப்போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் வரும் 28ம் தேதி முதல் ஒருவாரம் நடைப்பெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தமிழக ஹாக்கி அணியை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட ஹாக்கி வீரர்கள் பங்கு பெற உள்ளனர். இதற்கான பயிற்சி முகாம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது , முகாமினை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்து, இதில் கலந்து கொண்டு பயிற்சியில் விளையாடும் மேற்கு மண்டல காவல் துறை அணி மற்றும் தமிழக அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர், அது சமயம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், குப்பாகவுண்டர், குமார் , குமரன், அறிவழகன், ஆகியோர் உடன் இருந்தனர்.