12 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டு தினம் - மாணவிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு தினம் நடத்தப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-01-14 07:12 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவைப்படக்கூடிய மைதானங்கள் இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் விளையாட்டு தினம் கொண்டாடப்படாமல் இருந்தது,

இந்நிலையில் திருச்செங்கோடு PRD நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன் கொடுத்த ஊக்கத்தினால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த போட்டிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனுக்கு மாணவிகள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர் இதனை தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் PRD பரந்தாமன்,நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி என பலரும் கலந்து கொண்டனர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News