சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு தின விழா

‘மாணவிகள் விளையாட்டுத் துறையில் உலக சாதனை படைக்க வேண்டும்’ ‘மாணவிகள் உடலையும் உள்ளத்தையும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு தின விழாவில் காவல் துறை அதிகாரி சிறப்புரை.

Update: 2024-03-26 05:57 GMT

சேலம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கங்களான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, இரபீந்தரநாத் தாகூர் மகளிர் கல்வியில் கல்லூரி, விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் விளையாட்டு தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விளையாட்டு தின விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல், முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சங்ககிரி காவல் துறை ஆய்வாளர் ரஜினி மற்றும் சங்ககிரி மண்டல போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன், வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மிகப் பிரமாண்டமான விவேகானந்தா விளையாட்டு மைதானத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை காவல் துறை ஆய்வாளர் ரஜினி ஏற்றினார், சங்ககிரி வளாக முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். கல்லூரி கொடியை முதல்வர்கள், டீன், துறைத்தலைவர்கள் இணைந்து ஏற்றினார். அதன்பிறகு ஒலிம்பிக் ஜோதியை தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவிகள் காவல் துறை ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். ஆய்வாளர் ரஜினி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி நூற்றுக்கணக்கான மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவிகள் சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து விவேகானந்தா கல்லூரிக்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உறுதிமொழி ஏற்றனர். சமாதன, சமூக நல்லிணக்கதை வலியுறுத்தி புறாக்களை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பறக்கவிட்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவிகளுக்கு பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். அதன் பிறகு விளையாட்டு தின விழாவை முறைப்படி துவக்கி வைத்த காவல் துறை ஆய்வாளர் ரஜினி, ‘மாணவிகள் விளையாட்டுத் துறையில் உலக சாதனை படைக்க வேண்டும்; மாணவிகள் உடலையும் உள்ளத்தையும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

பிற்பகல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய சங்ககிரி மண்டல போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், “மாணவிகள் வேகத்துடன் வெற்றியை நோக்கி முன்னேறும் அதே வேளையில் பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். அதன்பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் சுப்பிரமணியன், முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ, முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர் ஆகியோர் வழங்கினர்.

இந்த விளையாட்டு தின விழாவில் விவேகானந்தா கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரிகளைச் சார்ந்த 2,000 மாணவிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். விளையாட்டு தின விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மெய்வேல், உடற்கல்வி இயக்குநர்கள் முரளிதரன், அபிநயா, சங்கீதா துறைத்தலைவர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் மைதிலி, டாக்டர் அபிதா, பேராசிரியர் சுகுணா, டாக்டர் பிரபாகரன், டாக்டர் பிரபுகுமார், மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி குழுமத்தின் விளையாட்டு துறை மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News