சேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

Update: 2024-01-12 11:01 GMT

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பிரிசில்லா லிடியா சத்யா தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் கே.ஆர்.ஜி தனபாலன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும் மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த விழாவில் சேலம் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவரும் 56-வது வார்டு கவுன்சிலருமான ஏ.எஸ்.சரவணன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News