ஸ்ரீவில்லிபுத்தூரில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் நெற்கதிர்களில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம்,அத்தி கோவில், தாணிப்பாறை,கூமாபட்டி, நெடுங்குளம் கொடிக்குளம், ரகுமத் நகர், சுந்தரபாண்டியம், சேதுநாராயணபுரம், இலந்தைகுளம் ,கோட்டையூர் , மகாராஜபுரம் ,
மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோடைகால நெல் நடவு செய்து விவசாய பணியினை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெற்பயிர்கள் கதிர் விட்டு கதிர்கள் பால் வைக்க ஆரம்பித்துள்ளது.கதிர்கள் விளைந்து அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள சூழ்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் குலை நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
இந்த நிலையில் இந்த நோயை தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் தாக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.