ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஸ்ரீ தேவாதி அம்மன் திருவிழா

ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஸ்ரீ தேவாதி அம்மன் திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்களே சமைத்து உண்டனர்.

Update: 2024-02-05 09:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் ஸ்ரீ தேவாதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறும். ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பர்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஜவுளித் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர். தொழில் சிறக்க ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீ தேவாதி அம்மனை கரகத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகத்தில் 10 ஆடுகள் பலியிடப்பட்டன. அதே பகுதியில் சமையல் செய்து ஆண்கள் மட்டுமே சாப்பிட்ட வினோத சம்பவமும் இங்கு தான் அரங்கேறியது. 
Tags:    

Similar News