ஸ்ரீ கலச அம்மன் ஸ்ரீ கலச விநாயகர் சுப்ரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா!
ஸ்ரீ கலச அம்மன் ஸ்ரீ கலச விநாயகர் சுப்ரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.;
Update: 2024-02-06 10:22 GMT
மகா கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை அருகே கவிநாடு கீழவட்டம் திருநாங்குபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கலச அம்மன் ஸ்ரீ கலச விநாயகர் சுப்ரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை கவிநாடு கீழவட்டம் சிறுநாங்குபட்டி என்ற கிராமத்தில்ஸ்ரீ கலச அம்மன் ஸ்ரீ கலச விநாயகா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் எழுப்பப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் வடிவேல் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது