ஸ்ரீ மதுரை காளியம்மன் தேர் திருவிழா அறிவுறுத்தல் கூட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா அறிவுறுத்தல் கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்றார்.

Update: 2024-03-17 11:53 GMT
தேர்திருவிழா ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டம் ,முசிறி அருகே தொட்டியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது, இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி மாதம் தேர் திருவிழா கடந்த ஜனவரி 16 ந்தேதி பாக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.விழா நிகழ்ச்சியாக கடந்த 12 ந்தேதி அன்று முதல் தட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வருகின்ற 19 ந் தேதிபூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து மூன்றாவது தட்டு சாத்துதல் அம்மனுக்கு காப்பு கட்டுதல், கதவடைதல், கதவடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானை வைத்து பொங்கலிட்டு படைத்தல், பின் திருக்கோயில் கதவு திறந்து அம்மன் தரிசனம், திருத்தேர் தலை அலங்காரம், திருத்தேர் திருவீதி உலா, திருகாப்பு உற்சவம், உதிர்வாய் துடைப்பு உற்சவம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அப்போது திருவிழா நடைபெறும் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். முசிறி டி எஸ் பி யாஸ்மின், வட்டாட்சியர் அருள்ஜோதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் விழா நிகழ்வு குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். அப்போது தேர் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பாதைகளை செப்பனிட்டு சீர்படுத்தி வைப்பது, திருத்தேரில் அசைவ பூக்களை சாற்றுதல் கூடாது, திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவற்றை முறையாக அமைத்து கொடுப்பது, தேர் வரும் பாதைகளில் உள்ள மின் வழித்தடங்களை மின்வாரியத் துறையினர் பாதுகாப்பாக கையாண்டு அசம்பாவிதங்களை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீஸார் கூறும் விதிமுறைகளை பொதுமக்களும் பக்தர்களும் பின்பற்ற கேட்டுக் கொள்வது, சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் விழா காலங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீர், உணவு, கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அவ்வப்போது பரிசோதித்து பாதுகாப்பான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், தேர் செல்லும் வீதிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மேலும் தேருடன் குறித்த போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, தொட்டியம் பேரூராட்சி நிர்வாகம் துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் தினசரி கோயில் தேர் செல்லும் சாலை மற்றும் வீதிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்துவது, உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர் ராஜன் திருவிழா என்பது பொதுமக்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்தவும், உறவுகளை பலப்படுத்தவும் நடத்தப்படுகிற நிகழ்வாகும். எனவே பொதுமக்கள் பக்தர்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படாமலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் திருவிழா கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் பேரூராட்சி மின்வாரியம் சுகாதாரத்துறை வருவாய் துறை காவல் துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News