இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்

Update: 2023-12-17 08:21 GMT

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழமை, புதுமை சேர்ந்தது தான் சனாதனம் என, வாழும் கலை அமைப்பு சார்பில் உலக அமைதிக்காக மதுரையில் நடந்த மகா சத்சங்கத்தில் அதன் நிறுவனர் நிறுவனர் ரவிசங்கர்ஜி பேசினார்.அவர் பேசியதாவது, அறத்தை மதித்து வாழ வேண்டும். அறத்தை மதிக்காத வாழ்க்கை குப்பை தான். நாட்டில் நிலவும் பல பிரச்னைகளுக்கு மனது தான் காரணம். பயம், சந்தேக மனது இருந்தால் முன்னேற முடியாது. சுய நம்பிக்கை இருந்தால் முன்னேறலாம். அதற்கு தியானம் தான் மாற்று வழி.தியானம், மூச்சு பயிற்சியால் பேரின்பம், சுறுசுறுப்பு, பரந்த மனப்பான்மை உருவாகும். நினைத்தது நடக்கும். மூச்சு பயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கவலைப்படக்கூடாது.பெரியவர்கள் திருப்தியடைந்த மனதிற்கு சொந்தக்காரர்கள். மனதில் ஆனந்தம் நிலவும். ஆசீர்வதிப்பதற்கு அவர்கள் தகுதியானவர்கள். அதனால் தான் அவர்களிடம் ஆசீர்வாதம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும்முன்னதாக ரவிசங்கர்ஜி கூறியதாவது:இந்தியாவில் 75 நதிகளை எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் புனரமைத்துள்ளனர். பல நீர்நிலைகளை ஆழப்படுத்தியுள்ளனர். மதுரையில் கிருதுமால் நதியை புனரமைத்தது மூலம் 400 கிராமங்கள் பயனடைகின்றன. குண்டாறு நதி சீரமைக்கப்பட்டுள்ளது. சிறுதானியத்திற்கு உலகளவில் மதிப்பு உள்ளது. அவை சர்க்கரை நோயை குணமாக்கும். பாரம்பரியமிக்க தமிழக உணவு தான் சிறந்த உணவு. ரசத்தில் 40 வகை மருந்துகள் உள்ளன.இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்போம். இன்னும் ஒன்றரை டிகிரி வெப்பநிலை அதிகரித்தால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மரங்களை நட வேண்டும்.நாடாளுமன்றத்தில் சில இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு, ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்.

Tags:    

Similar News