ஸ்ரீ வேட்டூர் சின்னமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் சூரப்பள்ளி கிராமம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாக்கவுண்டம் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ வேட்டூர் சின்னமாரியம்மன்,ஸ்ரீ பாலமுருகன் கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 7:30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. மங்கள வாத்தியம் வழங்க யாகசாலையிலிருந்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து முதலில் ஸ்ரீ விநாயகர் கோவிலிலுள்ள கோபுர கலசத்திற்கும் அடுத்ததாக ,ஸ்ரீ வேட்டூர் சின்னமாரியம்மன்,ஸ்ரீ பாலமுருகன் கோவில் கோபுர கலசத்திற்கும் புனித தீர்த்தத்தம் ஊற்றி ஹர ஹர ஹர ஓம்சக்தி, என முழக்கமிட்டபடி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனையை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர்,ஸ்ரீ வேட்டூர் சின்னமாரியம்மன்,ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் 1000யிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.