ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் கோடைத் திருநாள் துவக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடை திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் தொடங்கியது.

Update: 2024-04-14 01:13 GMT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கோடை திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவத்தில் வெளிக்கோடை 5 நாள், உள்கோடை 5 நாள் என நடைபெறும். விழாவையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசித்தனா். வரும் 16 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் வெளிக்கோடை திருநாள் உற்சவம் நடைபெறும். விழாவின் 5 ஆம் நாளான 17 ஆம் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் சோ்த்தி சேவையில் எழுந்தருளுகிறாா்.

வரும் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உள்கோடைத் திருநாள் விழாவில் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை வீணை ஏகாந்தச் சேவை நடைபெறுகிறது. கோடை திருநாளையொட்டி இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Tags:    

Similar News