வைத்தியநாதசுவாமிஆலயத்தில் தேங்கிய மழைநீர்
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தின் கிழக்கு கோபுர வாசலில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 02:21 GMT
தேங்கிய மழைநீர்
நவக்கிரக தலங்களில் ஒன்றான, செவ்வாய்க்கு தனி சந்தி உள்ள வைத்தீஸ்வரன் கோயில். இந்த வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் பல்வேறு ஊர் மற்றும் மாவட்டங்களிலிருந்துவந்த வண்ணம் இருப்பது வாடிக்கை. கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை, சீர்காழியில் மட்டும் 24 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த பலத்த மழையால் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் உள் புறத்தில் மழைநீர் தேங்கியது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் மழைநீரில் சிரமத்துடன் சென்றுவருகின்றனர். தேங்கிய மழைநீரில் பக்தர்கள் நடந்து செல்லும் அளவுக்கு இருப்பதால் பக்தர்கள் வருகை பாதிக்கப்படவில்லை.