ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பஸ் நிலையம் எதிரே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர்.;
Update: 2024-03-01 11:05 GMT
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பஸ் நிலையம் எதிரே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
எடப்பாடி நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். இதில் நகர பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.