ஆரணியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுகவினர் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர்.

Update: 2024-03-02 08:55 GMT
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு வட்ட திமுக சார்பில் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் எஸ். ராஜா வட்ட துணை செயலாளர். கோடீஸ்வரன்,வட்டப் பிரதிநிதிகள் ராஜேந்திரன், சபியா மகளிர் அணி ஸ்டெல்லா,ஜெயகுமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News