திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2024-02-28 02:16 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு ஒன்றிய திமுக சார்பில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் தெருமுனை பிரச்சாரம் திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கழகத்தின் இரண்டரை ஆண்டு சாதனைகளையும், விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தையும் பொது மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. திமுக அரசின் சாதனைகள் விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News