இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்ணை பிரச்சாரம் துவக்கம்
நார்த்தம்பட்டி மற்றும் லளிகம் ஊராட்சியில் அரசின் சாதனைகளை விளக்கி திமுக., துண்டு பிரசுரம் வழங்கினர்.
தர்மபுரி திமுக கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மற்றும் வட்டம் நார்த்தம்பட்டி மற்றும் லளிகம் ஊராட்சியில் திராவிட மாடல் அரசின் இரண்டரையாண்டு சாதனங்களை விளக்கி தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA, தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் DNV. செந்தில் குமார் MP ஆகியோர் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் மற்றும் 2024 தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி நிலை அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி,பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏஎஸ் சண்முகம்,நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கேபி மல்லமுத்து மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.