பழனி பாதயாத்திரை தொடக்கம்

சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி செட்டிப்பட்டி ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்கள் முருகர், வள்ளி, தெய்வானை சுவாமிகளை வாகனத்தில் அலங்கரித்து பழனி பாதயாத்திரை நடைபயணத்தை தொடங்கினர்.;

Update: 2024-01-16 02:48 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் பத்தாம் ஆண்டுகளாக தொடர்ந்து குருசாமி செல்லமுத்து தலைமையில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் ஜனவரி 1ம் தேதி மாலை அணிந்து தை முதல் நாளான இன்று மினி டெம்போ வாகனத்தில் முருகன், வள்ளி,தெய்வானை சுவாமிகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து செட்டிப்பட்டி பகுதியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வழி நெடிகளிலும் பொதுமக்கள் சுவாமிகளை வழிபட்டனர். இந்தப் பாதயாத்திரை குழு 5ம் நாள் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News