மாநில அளவிலான கபடி போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் அணி முதலிடத்தை பெற்றது

Update: 2024-01-01 02:41 GMT

மாநில அளவிலான கபடி போட்டி

விருதுநகரில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நகராட்சி மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 30, 31ம் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் விருதுநகர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆகிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 48 கபடி அணிகள் பங்கேற்றன.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில், இன்றுநடைபெற்ற இறுதி ஆட்டத்தில் விருதுநகர் மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. இந்த இறுதி ஆட்டத்தில் 23 - 18 என்ற புள்ளி அடிப்படையில் திருப்பூர் அணிகள் வெற்றி பெற்று முதல் பரிசையும் , இரண்டாவது பரிசை விருதுநகர் அணி தட்டிச்சென்றன வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகிய இரு அமைச்சர்கள் இணைந்து வழங்கினார்கள்.

Tags:    

Similar News